உலக சிறுநீரக தினத்தையொட்டி சென்னை ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ரலாஜி அண்ட் யூரோலஜி மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு சிறுநீரக பராமரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. இடம் : பெசன்ட் நகர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.