தண்டையார்பேட்டை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. இதில் பக்தர்கள் பலர் வேடமிட்டு ஊர்வலமாக சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.