திருநெல்வேலி ஜங்ஷன் கருப்பந்துறை அழியாபதி ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 70 சென்ட் நந்தவன நிலத்தில் தர்மராஜ் என்பவர் ஆக்கிரமித்திருந்த செங்கல் சூளை கட்டடத்தை ஹிந்து அறநிலையத்துறையினர் இயந்திரங்கள் மூலம் அகற்றினர்.
சட்டசபை தேர்தலில் வரும் ஏப்ரல் 23ல் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர், தங்கள் முகத்தில் வண்ண ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள். இடம்: குவஹாத்தி.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.