சென்னை, மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம்: நந்தம்பாக்கம்.
கேரளாவில் ஏப்ரல் 9ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு பிரசாரம் களைகட்டி உள்ளது. பரவூர் தொகுதியில் போட்டியிடும் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் காங்., வேட்பாளருமான வி.டி.சதீஷன் கொச்சியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரதமர் மோடியை மலையாள நடிகர் கிருஷ்ண குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவரது பேரக்குழந்தையை தூக்கி கொஞ்சிய மோடி. இடம்: பிரதமர் இல்லம், புதுடில்லி.
வனப்பகுதிகளில் அரிதிலும் அரிதாக காணப்படும் இந்திய சருகுமான்கள், அழிவின் விளிம்பில் உள்ளது; அவை குறித்த விபரங்களை தேடும் பணியை, வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
நீரின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உலக தண்ணீர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அன்றாட தேவைக்காக நீண்ட தொலைவில் இருந்து குடத்தில் குடிநீரை சுமந்து சென்ற பெண்கள். இடம்: அகர்தலா, திரிபுரா.
புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார காங்., தலைவர் ஐயப்பன் அக்கட்சியிலிருந்து விலகி என்.ஆர்.,காங்.,ல் சேர்ந்தார். அவர் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில்அமைக்கப்பட்ட செல்பி பாயிண்ட் முன்பு பொதுமக்கள் செல்பி எடுத்துச் சென்றனர்.