லோக்சபா தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் அருகே பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டதை கலெக்டர் பழனி எஸ்.பி., தீபக் சிவாச் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான தாகூர் கல்லூரி மைதானத்தை மாநில பா.ஜ.,தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பார்வையிட்டனர்.
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வந்த எல் வடிவ மேம்பாலம் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இன்னும் சில வாரங்களில் திறக்கப்பட உள்ளது.இடம் : அடையாறு
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.