சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்கரசெட்டிபட்டி கிராமத்தில் சாலை வசதி நடைபாலம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தவில்லை எனக்கூறி, அக்கிராம மக்கள், கிராமம் முழுதும் கருப்புக்கொடி கட்டியதுடன் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.