திருப்பூர் அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து, தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, யூனியன் மில் ரோட்டில் பிரச்சாரம் செய்தார். அவர் வருவதற்கு முன்பு, விஜயகாந்த், எம். ஜி. ஆர், வேடமணிந்தவர்கள் மேடையில் நின்று கட்சியினரை உற்சாகபடுத்தி கொண்டிருந்தனர்.
ஊட்டி பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில், சேரம்பாடி மின்வாரிய எதிரே பயணிகள் நிழற்குடை புதருக்குள் மறைந்துள்ளதால், பயணியருக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி, மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் ரத்னாங்கி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் 2025-26 வினாடி வினா போட்டி திரிவேணி அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது.