பெருகிவரும் கட்டடங்களுக்கு நடுவே கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கும் வயல் வெளிகள்.இடம்: முகலிவாக்கம், சென்னை.
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
மரபின் மைந்தன் முத்தையா எழுதிய 80-வது நூலான ‘சத்குரு, மாறும் யுகத்தின் முகம்’ நூலின் அறிமுகப் படியை, மலேசியாவின் பத்துமலையில் நடைபெற்ற மகா சத்சங்க நிகழ்ச்சியில் சத்குரு பெற்றுக்கொண்டார்.