ஆண்டுகள் பல கடந்தாலும் நீங்கா நினைவுகள் சில தலைவர்கள் மேல் இருக்கத்தான் செய்கின்றன. மேட்டுப்பாளையத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வேடமனிந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த தொண்டர்கள். இவர்களுடன் பொதுமக்களும் நினைவை பகிர்ந்து கொள்ள போட்டோ எடுத்துக் கொண்டனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..