கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாக சார்பில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் செல்போன் டார்ச் லைட்டை ஒளிர விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காஞ்சிபுரம், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கோ பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து உற்சவர் முருகன் ரத்தினாங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.