பாஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து புதுச்சேரி அண்ணா சாலையில் நடந்த ரோடு ஷோ, பிரச்சார நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், ஜான் குமார், அசோக் பாபு மற்றும் திரளாக நடந்து வந்த பாஜ.,வினர்.
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இடம்: துணை ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.
மரபின் மைந்தன் முத்தையா எழுதிய 80-வது நூலான ‘சத்குரு, மாறும் யுகத்தின் முகம்’ நூலின் அறிமுகப் படியை, மலேசியாவின் பத்துமலையில் நடைபெற்ற மகா சத்சங்க நிகழ்ச்சியில் சத்குரு பெற்றுக்கொண்டார்.
யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து, சென்னை போரூரிலிருந்து, பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து பயணம் செய்தார்.