ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட தாம்பரம். பல்லாவரம். சோளிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணிக்க கார்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தம் பணி நடைபெற்றது. இடம்: தாம்பரம் ரயில்வே மைதானம்.
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் த.வெ.க.,தலைவர் விஜய் பங்கேற்க உள்ள பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி.தமிழ்இனியன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அ.திமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சுக்கு, நினைவுப் பரிசை வழங்கிய வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார். இடம்: வில்லிவாக்கம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.