லோக்சபா தேர்தலுக்கான மத்திய சென்னை தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் வினோஜ், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.உடன் கட்சி நிர்வாகிகள்.இடம்: தி.நகர், சென்னை.
அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயத்தின் உற்பத்தி, இந்த ஆண்டின் துவக்கத்தில் நிறுத்தப்பட்டது. அதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக, சவப்பெட்டிஒன்றில், பென்னி நாணங்களை எடுத்து சென்றனர். இடம்: லிங்கன் நினைவிடம், வாஷிங்டன்.
ஆண்டுதோறும் டிசம்பர் இறுதியில் இருந்து, 40 நாட்கள் கடுமையான குளிர் நிலவும் பருவத்தை, ஜம்மு - காஷ்மீரில், 'சில்லாயி கலான்' என்று அழைக்கின்றனர். அங்குள்ள குல்மார்க்கில், பனி படர்ந்த பள்ளத்தாக்கை ரசித்த சுற்றுலா பயணியர்.
கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பாஜ வரலாற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 101 வார்டுகளில், 50 இடங்களில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் பதவியேற்றனர். வரும் 26ம் தேதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
குஜராத்தின் சூரத்தில் பி.பி.சவானி குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில், தந்தையை இழந்த 133 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டன.
நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில், இந்திய உணவு கழகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்கு முதன் முறையாக சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவு தானியங்கள்.