விடுமுறை தினத்தில் கடற்கரையில் குவியும் பொதுமக்கள் கூட்டத்தால் கடற்கரை சாலை முழுவதும் நிரம்பி நிற்கும் வாகனங்கள் இதனால் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள்.இடம் : பெசன்ட் நகர்.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.