சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோயிலில் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இடம்:நேதாஜி நகர்.
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள லு லு தினசரி சூப்பர் மார்கட்டை சபாநாயகர் ஜே.சி.பி.,பிரபாகரனுக்கு , லுலு மார்க்கெட் குழுமத்தின் தலைவர் யூசப் சுற்றிக் காண்பித்தார்
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா