பருவமழை துவங்க உள்ள நிலையில் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கட்டட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு நடந்து வரும் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை மேம்பால பணி. இடம்: சிந்தாதரிபேட்டை
வெறிச்சோடியது...!விடுமுறை தினம் என்றாலே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படும் மகாளய அமாவாசை முன்னிட்டு அசைவ பிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.