பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வின் போது, தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.