தேனியில் நேற்று பெய்த மழையால் சகதியா மாறிய ரோடால் ஊர்ந்து சென்ற வாகனங்களால் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ். இடம் : தேனி - மதுரை ரோடு.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் த.வெ.க.,தலைவர் விஜய் பங்கேற்க உள்ள பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி.தமிழ்இனியன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.