திருநெல்வேலியில் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் பைந்தமிழ் படிப்பகத்தை போலீஸ் கமிஷனர் பா.மூர்த்தி துவக்கி வைத்தார். அதே வளாகத்தில் உள்விளையாட்டு அரங்குகள் உடற்பயிற்சி கூடம் பெண்களுக்கு பெண் போலீசாருக்கான ஓய்வறைகளையும் திறந்து வைத்தார்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.