பாகூரில் பிரதமர் நரேந்திர மோடியின் 75 பிறந்த நாளையொட்டி, கிரீன் வாரியர்ஸ் இந்தியா அமைப்பின் சார்பில், திருவிளக்கு பூஜையில், கலந்து கொண்ட பெண்கள் கூட்டத்தில் ஒரு பகுதி
வட மாநிலங்களில் விஸ்வகர்மா பூஜா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ஆயுத காவல் படை பிரிவில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு அர்ச்சகர் பூஜை செய்தார்.
மலை பிரதேசம் என்றாலே மனதில் தென்படும் சந்தோஷத்திற்கு அளவேது! அடர்ந்த காடும், ரப்பர் மரங்களும் சூழ மனதை மயக்கும் இப்படி ஒரு சாலையை கண்டால் பயணிக்க தானே தோன்றும் மனது. இடம்: கேரள மாநிலம் திருச்சூர்- சிம்மினி அணை செல்லும் சாலை.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலையை இணைக்கும் வகையில் 204 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சாலை அமைக்கும் பணி எட்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. தற்போது 500 மீட்டர் நீளத்துடன் பாதியில் நிற்கிறது. இடம்: துரைப்பாக்கம்.
திருப்பூர், திருமுருகன்பூண்டி ஐகேஎப் வளாகத்தில் துவங்கிய நிட்போ கண்காட்சியில் இடம்பெற்ற ஆடை ரகங்களை ஏஇபிசி தலைவர் சுதிர் ஷேக்ரி பார்வையிட்டார். அருகில் ஏஇபிசி துணை தலைவர் சக்திவேல், அபாட் தலைவர் இளங்கோவன், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்.