முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளை ஒட்டி, விருத்தாசலத்தில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் காங் கட்சியினர் மவுன ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தினர்.