தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் கலையும் கைவண்ணமும் என்ற கோடைகால இலவச ஓவியம் வரைதல் மற்றும் ஆபரண தயாரிப்பு பயிற்சி வகுப்பு தண்ணீர் பந்தல் அருகேயுள்ள மான்செஸ்டர் சித்தாரா அபார்ட்மெண்டில் நடந்தது. இதில் பங்கேற்றவர்களுடன் பெவிக்ரில் நிறுவனத்தின் மண்டல மார்க்கெட்டிங் மேலாளர் பிரபாகரன், மான்செஸ்டர் சித்தாரா ஓனர்ஸ் அசோசியேசன் செயலாளர் பிரேமலதா, தலைவர் யுவராஜன், இணை செயலாளர் நலேந்திரன், பொருளாளர் வசந்தி ராமசாமி, பெவிக்ரில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இன்சார்ஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்.
உடுமலை ஸ்ரீ வர்ஷினி டிவிஎஸ் நிறுவனத்தின், 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 3 நாட்கள் நடந்த கலை மற்றும் பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ வர்ஷினி நிர்வாக இயக்குனர் இளங்கோ, இணை நிர்வாக இயக்குனர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கர்நாடகாவின் ஷிவமொக்காவில் மகிளா தசரா விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பைக் கவுரவிக்கவும் நடத்தப்படும் இந்த நிகழ்வில் பெண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்பர்.அவர்களின் நாட்டுப்புற கலை வடிவமிது.
புதுச்சேரி சாய் ப்ரைமஸ் பயோ டெக் லிமிடெட் நிறுவனர் சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சாலையோரங்களில் உள்ள முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது இடம் ஜி.எஸ்.டி சாலை பெருங்களத்தூர்