விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி