தாய்லாந்தில் நடந்த 3வது ஆசிய பசுபிக் யோகா போட்டியில் தங்கம் வென்ற புளியங்குடி போலீஸ் ஷைலாவின் மகன் முகில்வர்ஷனை தென்காசி மாவட்ட எஸ்.பி., சுரேஷ்குமார் பாராட்டினார்.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி