உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா கோவை சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார்புரத்தில் நடந்தது. இதில் ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்ட தன்னார்வலர்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.