திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள ஆர் டி ஒ அலுவலகத்தில் இரண்டு பக்கங்கள் நுழைவாயில் இருந்தும் ஒரு பக்கம் கேட் பூட்டு போட்டுள்ளதால் மனு கொடுக்க வருபவர்கள் சிரமப்படுகின்றனர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.