மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ தடத்தில், கொளத்துார் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட துாண்கள் மீது மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில் 1008 பால்குட திருவிழாவை முன்னிட்டு கபாலீஸ்வரர் கோவில் இருந்து கோலவிழி அம்மன் கோவில் வரை ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் வைப்பாறு மணற்பரப்பில் குழி தோண்டப்பட்டு அதில் வரும் ஊத்து தண்ணீரை குடிக்க எடுத்துச்செல்லும் அப்பகுதி மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் நிழற்குடை முன் வைக்கப்பட்டிருந்த திமுக விளம்பர பேனரால், பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீசார் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, கட்சியினர் விளம்பர பேனரை அகற்றினர்.
ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு இளைய மடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலசாபிஷேகம் செய்தார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பஹல்காம் அருகே உள்ள அடிவார முகாமில், யாத்திரை துவங்கும் முன்னரே பதிவு செய்ய குவிந்த தன்னார்வலர்கள்.