புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் கழிவுநீர் சாக்கடை விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பத்தை கண்டித்து கம்பன் நகர் விழுப்புரம் சாலையில் மா.கம்யூ.,மற்றும் வி.சி., கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து, தனியார் பேருந்துத் துறையைப் பாதுகாக்கக் கோரி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு முன்பு மாதிரி பேருந்துடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மங்கையர்க்கரசி கல்லுாரியில் நடந்த பூமியை வாழவைப்போம் நுால் வெளியீட்டு விழாவில் கல்வி குழும தலைவர் அசோக்குமார் பேசினார். இடமிருந்து பேராசிரியை ரேணுகா தேவி, நுாலாசிரியர் திருமலை, ராஜேந்திரன், நுால் வெளியீட்டாளர் ராம சுப்பிரமணியன், பாலு.
தமிழக அரசு சார்பில், டில்லி ரபி மார்க் கான்ஸ்டிடியூஷனல் கிளப்பில் நடத்தப்படும் தமிழக கைவினைப் பொருட்கள் கண்காட்சியை டில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு இல்ல அதிகாரிகள்.
சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது திடீரென பெய்த மழையால் மக்கள் நனைந்து கொண்டே பயணங்களை மேற்கொண்டனர் இடம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர்