கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரித்த வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேற்கு தொடர்ச்சி மலையின் மீது தவழ்ந்து வரும் கார் மேகங்கள் காண்பதற்கும் குளிர்ச்சியாக உள்ளது. இடம்: மேட்டுப்பாளையம்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.