திருப்பூரில், அதிநவீன பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி காங்கயம் ரோடு, வேலன் ஹோட்டல், வளாகத்தில் துவங்கியது. இதில் பியோ தலைவர் சக்திவேல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, சைமா தலைவர் ஈஸ்வரன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், டீமா தலைவர் முத்துரத்தினம், டாஸ்மா தலைவர் சோழா அப்புக்குட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.