ஜம்புத் தீவு பிரகடனம் நினைவு நாள் மற்றும் தமிழகத்தில் அறியப்படாத தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த சிறப்பு ஆய்வு செய்த மாணவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நடந்தது. இதில் தமிழக கவர்னர் ரவி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.