விஜயதசமியை முன்னிட்டு தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு "அ"னா "ஆ"வன்னா எழுத கற்றுத்தரும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடந்தது.
தாயின் அரவணைப்பை விட சிறந்த பாதுகாப்பு எதுவுமில்லை என்பது போல, குட்டிகளை அணைத்து கூட்டு குடும்ப உன்னதத்தை உணர்த்தும் குரங்கு குடும்பம். இடம்: ஆழியாறு ரோடு.
விஜயதசமி முன்னிட்டு, கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுத பயிற்றுவிக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது .
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவ புரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
சிறுமியரை துர்க்கையின் அவதாரமாக வழிபடும் குமாரி பூஜை வட மாநிலங்களில் நடந்தது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த நிகழ்வில் ஒரு பெண் குழந்தையின் கால்களை கழுவி பூஜை செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வந்த திருப்பதி கொடை பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.