அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனையில், துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சைக்கான, ஸ்டீரியோடாக்டிக் திட்டம் துவக்கப்பட்டது. இதில் இடமிருந்து வலம் - புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறை டாக்டர்கள் மஹாதேவ் போதராஜி, ரத்னாதேவி, சஞ்சய் சந்திரசேகர், அக்யுரே நிறுவனத்தின் மார்கெட்டிங் மேனேஜர் வர்டிகா மோங்கா மற்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறை முதுநிலை டாக்டர் சங்கர் வங்கிபுரம். இடம் : நுங்கம்பாக்கம், சென்னை
குன்னூரில் இருந்து பர்லியார் வரையிலான மலைப்பாதையில் மழை பொழிவால் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளி உருகுவது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின் கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டம். சுற்றுலா பயணியரை வசீகரிக்கின்றன. இடம்: மாணிக்கா எஸ்டேட்.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் 17 ம் தேதி துர்கா பூஜை துவங்க உள்ள நிலையில் பந்தலில் துர்கா தேவியின் சிலையை நிறுவ எடுத்துச் சென்ற பக்தர்கள். இடம்: நாடியா.
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. பிரதமர் மோடி பள்ளியின் ஏ.ஐ.,லேப் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி மற்றும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி. உடன் இடமிருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் .
ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடியை வரவேற்ற பள்ளி மாணவிகள்.
விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா நடத்தும், ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.