சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் மின்சார ரயில் மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்ட பூங்காவில் உள்ள மைதானத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் குழந்தைகள். இடம் : திருவான்மியூர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..