கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள எல்லை கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜையில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜம்மு- காஷ்மீரின் ஸ்ரீநகரில் இலையுதிர் காலம் துவங்கி உள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்த செம்மஞ்சள் நிற இலைகள் இடையே நடந்து சென்றவர்களுக்கு அழகிய சூழலை ஏற்படுத்தியது.
சீக்கிய சமயத்தின் நிறுவனர் குரு நானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் 'நகர் கீர்த்தன்' நிகழ்ச்சி நடந்தது. இதில் சீக்கியர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்ற சிறுவர்கள், பக்தி பாடல்களை பாடினர்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோமில், 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
சிதம்பரம் தில்லை கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. மூலவர் சன்னிதி கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்ற பக்தர்கள் கோவிந்தா நாமம் முழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம், கொப்பூர் ஊராட்சியில் உள்ள கிளை நூலகம், மதுக்கூடமாக மாறியது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிளை நூலகம் சீரமைக்கப்பட்டு உள்ளது.
உலக கல்விக்கழகங்கள் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு மாநாடு டில்லியில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, வேலூர் விஐடி பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்தார்.
அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ் வளாகத்தில் திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஓவிய கண்காட்சி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இடம்: நுங்கம்பாக்கம்.