கோவை கோபாலபுரம் பிலாசா இன் ஒட்டல் அரங்கில் ஆஸ்ட்ரோ வேதிக் விஷனின் அஷ்ட மங்கல பிரசன்ன வகுப்பு நடத்தி சான்றிதழ் வழங்கிய பரம்ம ஸ்ரீ மஹதேவ ஐயர் அருகில் ஆஸ்ட்ரோ வேதிக் விஷனின் நிறுவனர் மற்றும் இயக்குனர் சிவகுமார், மகளிர் தலைவர் தரணி நம்பூதிரி உள்ளிட்டோர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேசிகர் உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்திற்கு முன்பாக மின்னொளியில் ஜொலித்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
தினமலர் நாளிதழ் சார்பில் பெங்களூரில் முதன்முறையாக நடந்த வித்யாரம்பம் விழாவில் மழலையின் கையை பிடித்து விராலி மஞ்சள் மூலம் அரிச்சுவடி எழுதுவதை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தார்.
தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.