சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பள்ளிப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பால் தினகரன் இலவச பள்ளிப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்களை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கினார். உடன் கேத்லின், இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் தினகரன், ஸ்டெல்லா ரமோலா மற்றும் டேனியல் டேவிட்சன். இடம் : வானகரம், சென்னை
ஆண்டிபட்டி முத்துக்கிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை பல்துறை வல்லுநர் ஜபீன்பானு, பள்ளி இயக்குனர் கயல்விழி ஆகியோர் பார்வையிட்டனர்.
: 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக, புது டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்
மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் வங்கி, வணிகவியல் துறை சார்பில் மாணவர்களின் தொழில் முனைவு திறனை மேம்படுத்தும் வகையில் நடந்த எஸ்.எல்.சி.எஸ். சந்தையை கல்லுாரி செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு துவக்கி வைத்தார். இடமிருந்து துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, பேராசிரியைகள் அனுராதா, பத்மாவதி , முதல்வர் சுஜாதா, நிர்வாக அதிகாரி லட்சுமணன்.
மதுராந்தகம் இடைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு த.வெ.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்த அமைச்சர் ராஜ்குமாருக்கு, கடலுாரில் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், சங்காலயா மோட்டார்சின் பிரசார வாகனத்தை பரிசாக வழங்கினார்.