திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் வன்னியர் சங்கம் துவங்கி 45 வது ஆண்டு துவக்க விழாவில் பா.ம.க. ,நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். அருகில் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர் குப்பம்.
தென் மாநிலங்களில் மிக முக்கியமானதும் 105 அடி உயரம் கொண்டதுமான ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 59 அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போதெல்லாம் மூழ்கிக் காணப்படும், டணாய்க்கன் கோட்டை தற்போது வெளியே தெரிகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி விழும் பாறையில் தொன்மையான சிவலிங்க சிலைகள் இருக்கின்றன. இங்கு நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த தற்போது மீண்டும் நடக்கின்றன.