தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழாவில், தங்க சப்பரத்தில் எழுந்தருளிய சங்கர நாராயண சுவாமி, வெள்ளி ரிஷப வாகனத்தில் கோமதி அம்மனுக்கு தபசு காட்சி தந்தார்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வே பாரதி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தயார் நிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.