பொதுமக்கள் அதிகம் கூடும் எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் அமரும் இடங்கள் வரை நீண்டுள்ள கடைகள் இதனை முறைப்படுத்தி குறிப்பிட்ட இடங்களில் கடைகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் .இடம் : பெசன்ட் நகர்.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் இயந்திர நடவுக்காக நாற்றுபாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் டஸ்ஸெல்டோர்ப் நகரில் உள்ள குன்ஸ்ட்பாலஸ்ட் கலை அருங்காட்சியகத்தில், பழங்கால கலை பொருட்களுடன் அப்போது பயன்படுத்திய வாசனை திரவியங்களும் இடம்பெற்றன.
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் துவங்கியது. இடம்: யாங்கூன்.
வட்ட வடிவிலான காக்கி நிற தொப்பி அணிந்து வந்த கர்நாடக போலீசாருக்கு நேவி நீல நிறத்தில் புதிய தொப்பி வழங்கப்பட்டு உள்ளது. அறிமுக விழாவில் புதிய தொப்பியுடன் போலீசார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.