சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில் , தேசிய அளவிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்ககால தமிழ் நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள் மற்றும் கலைப் பொருட்களின் மூன்று நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. அதை ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள். இடம் : விருகம்பாக்கம், சென்னை
தன் சிறகுகளை விரித்து மகிழும் இந்த பறவையைப் போல, மனிதனும் கவலைகளை மறந்து வாழ ஒரு இடம் தேடுகிறான்... ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் அந்த சந்தர்ப்பத்தை தருவதில்லை. இடம்: கோவை செட்டிபாளையம்
கிண்டி ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் மேற்கூரை பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்.இடம் : கிண்டி
கொச்சின் ஷிப்ட்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் மங்களோர்,இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்:மும்பை,மகராஷ்ட்ரா