சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில் , தேசிய அளவிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்ககால தமிழ் நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள் மற்றும் கலைப் பொருட்களின் மூன்று நாள் கண்காட்சி துவங்கியது. அதை ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள். இடம் : விருகம்பாக்கம், சென்னை
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேசிகர் உற்சவ விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்திற்கு முன்பாக மின்னொளியில் ஜொலித்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்.
தினமலர் நாளிதழ் சார்பில் பெங்களூரில் முதன்முறையாக நடந்த வித்யாரம்பம் விழாவில் மழலையின் கையை பிடித்து விராலி மஞ்சள் மூலம் அரிச்சுவடி எழுதுவதை பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் துவக்கி வைத்தார்.
தசரா, ஆயுத பூஜை காரணமாக, ஊட்டிக்கு வந்த சுற்றுலா வாகனங்கள் தலைகுந்தா பகுதியில் பல மணி நேரம் அணி வகுத்து நிற்பதால் உள்ளூர் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க போதிய தொலை நோக்கு திட்டங்கள் அவசியமாக உள்ளது.