தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடக்கிறது. சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் புதிய கொடி மரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வேங்கை மரங்கள் கொண்டு வரப்பட்டன.
பிரசார மேடையில் தலைவர்கள் கர்ஜிப்பதற்கு முன்பே, தொண்டர்கள் தங்கள் முகத்தில் தலைவர்களை சுமக்க துவங்கிவிட்டனர். மாஸ்க்கை கழற்றினால் நான்...மாட்டிக்கொண்டால் என் தலைவர்! என்ற ரேஞ்சுக்கு கலக்கி வருகின்றன இந்த லீடர் மாஸ்க்குகள். இடம்: பிராட்வே, சென்னை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் இரண்டாம் நாளில், வெள்ளி சூரிய பிரபையில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. இடம்: ஆண்டிப்பட்டி, தேனி.