திருப்பூரில், தி.மு.க இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி, பழவஞ்சிபாளையம் அறிவாயலத்தில் நடந்தது. இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேச்சு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.