கோவை மாநகர மனவளக்கலை அறக்கட்டளைகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் 114 வது ஜெயந்தி உலக அமைதி தின விழா வேதாத்திரிய கருத்தரங்கு, கோவை ஆர்.எஸ்.,புரம் சிந்து சதன் ஹாலில் நடந்தது. இதில் கோவை அறக்கட்டளை துணைத் தலைவர் சுப்பிரமணியன் பேசினார். அருகே, (இடமிருந்து) ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., நாகராசன், பி.என்.,புதூர் அறக்கட்டளை பேராசிரியர் சமத்துவ ராணி, வீரியம்பாளையம் அறக்கட்டளை பேராசிரியர் முருகேசன், கோவை மத்திய மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் அருணா உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.