கோல்கட்டாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்கள். இடம்: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி முன்,
தென்மேற்கு பருவமழை முன்னதாக துவங்கிய நிலையில் தர்பூசணி பழங்கள் சீசன் முடிவுக்கு வந்துள்ளது. விவசாயிகள் தர்பூசணி பழங்கள் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர்...இடம்: தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தா...
அடையாறு ஆற்றில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகள். இதனால் நீரோட்டம் தடை படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இடம் : கோட்டூர்புரம்
புதுச்சேரி காந்தி வீதி பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பூர், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விவேகானந்தா சேவா அறக்கட்டளை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.