கோவை கொடிசியா அரங்கில் நடந்த இரும்பு மற்றும் இரும்பு சாரா பவுண்டரி தொழிலுக்கான சர்வதேச கண்காட்சியில் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட ஏ.வி., குரூப் ஆப் கம்பெனி தலைவர் வரதராஜன், கிராப்ஸ்மேன் ஆட்டோமேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ரவி, வீல்ஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம் உள்ளிட்டோர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.