கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மாற்று திறனாளிகளுக்கு கடன் வழங்கும் மேளா நடந்தது. இதை தேசிய மாற்று திறனாளிகள் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் உதவி பொதுமேலாளர் சங்கர் ஷர்மா மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பழனிசாமி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.