திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே மற்றும் கிரிவல பாதையில் பக்தர்களை வழி மறித்து இடையூறு செய்யக்கூடாது என திருநங்கைகளுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன். உடன் சமூக நலத்துறை அலுவலர் சரண்யா உள்ளிட்டோர் இருந்தனர்.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.