மதுரை தேவகி மருத்துவமனையில் இதய ரத்த குழாய்களின் தன்மைகளை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மகோடா கருவியின் அறிமுக விழாவை டாக்டர் தேவகி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இடமிருந்து டாக்டர்கள் நாகேந்திரன் , ரூபஸ் , ரீனஸ் , லட்சுமணதாஸ்.
உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கழிப்பறை கதவு கழன்று 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அப்படியே வைத்துள்ளனர். சரிசெய்ய ஆள் கிடைக்க வில்லையா, இல்லை ஆணி கிடைக்க வில்லையா.
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.